Home Tamil Cinema News புதிய பாடல்கள் மூலம் பழைய இடத்தை பிடித்த சிம்பு!

புதிய பாடல்கள் மூலம் பழைய இடத்தை பிடித்த சிம்பு!

133

tumblr

நடிகர் சிம்பு கடைசியாக வந்த பீப் சாங் பிரச்சனையிலிருந்து அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப்போகாதே பாடல் மூலம் மீண்டு வந்தார். பாடல் வெளியானதிலிருந்து அந்தப்பாடல் இளைஞர்களின் ரிங்டோனாக மாறியுள்ளது.

இந்த பாடல் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக டாப் 10 வரிசையில் இடம் பிடித்து வருகிறது. யூடியூபில் மட்டும் 36 லட்சம் பார்வையாளர்களை தாண்டி சென்றுள்ளது. இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

சென்னையின் பிரபல வானொலிகளில் கடந்த வாரம் தள்ளிப்போகாதே பாடல் தான் முதலிடத்தில் இருக்கிறதாம். இதனையடுத்து என்னம்மா இப்படி பண்றீங்களே பாடல் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.