Home Tamil Cinema News மணிரத்னம் படத்தின் முக்கிய வேடத்தில் சிம்பு…

மணிரத்னம் படத்தின் முக்கிய வேடத்தில் சிம்பு…

26

மணிரத்னம் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது படங்களில் வரும் காதல் காட்சிகள் பலருக்கும் விருப்பமானவை. கடைசியாக இவர் இயக்கி கார்த்தி, அதிதி ராவ் நடித்த ‘காற்று வெளியிடை’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி வந்து ஏமாற்றியது. இந்த நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் இந்தத் தகவல் வெளியானது.

தற்போது, இப்படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு, மணிரத்னம் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது சிம்பு ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

சிம்பு மணிரத்னம் கூட்டணி உறுதியானதையடுத்து சிம்பு ரசிகர்களும், மணிரத்னம் ரசிகர்களும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். நெட்டிஸன்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

கொண்டாட்டம் : மணிரத்னம் – சிம்பு காம்போ. இனிமே கொண்டாட்டம் தான். என தாரை தப்பட்டையோடு உற்சாகமாகிறார்கள் ரசிகர்கள்.

போடுங்கடா வெடிய : ‘ப்ரேமம்’ படத்தில் கெத்தாக வரும் நிவின் பாலி குரூப்பின் படத்தைப் பதிவிட்டு உற்சாகத்தைக் காட்டுகிறார்கள் ரசிகர்கள்.