Home Tamil Cinema News அன்பானவன் அசராதவன் அடங்காதவனாக மாறிய சிம்பு!

அன்பானவன் அசராதவன் அடங்காதவனாக மாறிய சிம்பு!

122

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

திரையுலகில் அஜித்திற்கென்று பெரும் ரசிகர் கூட்டம் இருக்கின்றது, அதில் நடிகர் சிம்புவும் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். அந்த வகையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தனது புதிய படத்தின் டைட்டிலையும் அறிவித்துள்ளார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்துக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் சிம்பு 3 கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார். இந்தபடத்தில் 3 கதாநாயகிகள் ஒப்பந்தமாகவுள்ளனர். மேலும், நேற்று சூப்பர் ஸ்டாரின் கபாலி டீசரும், அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் வைரலான போதும் இந்த படத்தின் தலைப்பும் சிறிது நேரம் டிவிட்டரில் டிரெண்டாக இருந்தது.