Home Tamil Cinema News சிம்பு இனி பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யப்போகிறாராம்!

சிம்பு இனி பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யப்போகிறாராம்!

119

simbu-1சமீபத்தில் சிம்பு பாடிய காதல் தோல்வியை பற்றிய பீப் பாடல் பிரச்சினை அவரை மிகவும் மன தனைக்குள்ளாக்கியுள்ளது.

இதனால் அவரது சினிமா வாழ்க்கையும் சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த வேதனையிலிருந்து சிம்புவை மீட்க அவரது பெற்றோர் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதனால், காதல் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருந்தவர் தற்போது பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சமீபத்தில் பெற்றோர் மற்றும் குடும்ப நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளது. அந்த இடத்தில் பெற்றோர்கள் சிம்புவை சீக்கிரமாகவே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்த, சிம்புவும் தனக்கு பெண் பார்க்குமாறு பெற்றோர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு சிம்பு தனது பெற்றோர்களிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் பார்க்கும் பெண் தனக்கு பிடிக்கவேண்டும். அதேநேரத்தில் அந்த பெண்ணுக்கும் தன்னை பிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்ற பெற்றோர்களும் உடனடியாக சிம்புவுக்கு பொருத்தமான பெண்ணை தேட ஆரம்பித்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here