மீனவர்களை விடுவியுங்கள் இல்லையேல் என்னை கைது செய்யுங்கள்- சிம்பு அதிரடி

மீனவர்களை விடுவியுங்கள் இல்லையேல் என்னை கைது செய்யுங்கள்- சிம்பு அதிரடி

17

நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டிற்காக கொடுத்த ஆதரவு குரல் எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவர் இதற்காக தனது வீட்டின் முன்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டார். சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை ஏற்பட்டது குறித்து சிம்பு தற்போது மனம் திறந்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பது, ‘ஜல்லிக்கட்டு சட்டம் குறித்து அரசு முறையாக விளக்கியிருந்தால் வன்முறை நடந்திருக்காது,

மேலும் ஜல்லிக்கட்டுக்காக உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது. அதை வேண்டுமென்றே ஒரு சிலர் வன்முறையாக்கியுள்ளனர்.

இது மட்டுமின்றி ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களையும், அவர்களுக்கு உதவியதற்காக மீனவர்களையும் காவல் துறையுனர் கைது செய்துள்ளனர், நானும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்தவன் தான், முதலில் என்னை கைது செய்யுங்கள்’ என்று அதிரடியாக பேசியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY