Home Tamil Cinema News விக்ரம் பிரபு படத்திற்கு பாடல் பாடிய சிம்பு!

விக்ரம் பிரபு படத்திற்கு பாடல் பாடிய சிம்பு!

102

simbu_songs_song001

நடிகர் சிம்பு தனது படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடி வருகிறார். அவர் பாடும் பாடல்கள் ஹிட் ஆவது தான் அதற்கு காரணமாம்.

இந்த நிலையில் கணேஷ் வினாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி நடித்து வரும் வீர சிவாஜி படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை டி.இமான் இசையில் பாடியுள்ளார் நடிகர் சிம்பு.

வில்லனாக ஜான் விஜய் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. படத்தின் வேலைகள் முடிவடைந்தவுடன் வெளியீடு பற்றிய செய்திகள் வெளிவரும் என்று தெரிகிறது.