Home Tamil Cinema News 30 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ள சிம்பு படம்

30 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ள சிம்பு படம்

139

Simbu_2656914f

சிம்பு பாடிய பீப் பாடல் விவகாரம் விஸ்வரூபமாய் உருவெடுத்து அவரை இன்றும் விடாது துரத்திக்கொண்டிருக்கிறது. இருப்பினும் மக்கள் சிம்புவை மறப்போம் மன்னிப்போம் என்ற பன்புடன் அதனை மறந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது சிம்பு பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் வெளிவர துவங்கியிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு சிம்பு தனது திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் அவர் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை மெல்லிசை படம் மற்றும் ஆக்கோ ஆல்பம் ஆகியவற்றை தயாரித்த ரேபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் மீடியாக்களில் செய்திகள் வந்துள்ளது.

இந்தப்படத்தில் சிம்பு மூன்று வேடத்தில் நடிக்க போகிறார் என்று கூறப்படும் நிலையில், அந்த படத்தினை 30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார்களாம்.இத்துனை நாட்கள் சிம்புவின் மீதான பீப் பாடல் சர்ச்சையினால் கலக்கத்தில் உள்ள அவரது ரசிகர்கள் இந்த செய்தியினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.