Home Tamil Cinema News சமூக வலைதளங்களில் பரவிவரும் சிம்புவின் ‘தள்ளி போகாதே’ பாடல்

சமூக வலைதளங்களில் பரவிவரும் சிம்புவின் ‘தள்ளி போகாதே’ பாடல்

569

Simbu-Gautam

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து தற்போது உருவாகி வரும் படம் அச்சம் என்பது மடமையடா. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தள்ளி போகாதே என்ற பாடல் சமூக வலைதளத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே பிரபலமான பாடலாக மாறி வருகிறது. இந்த பாடல் ரீமிக்ஸ், டப் ஸ்மாஷ் என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது.

ரசிகர்களின் இந்த ஆர்வத்தை கவனித்த இயக்குனர் கௌதம் மேனன் அவற்றில் சிலவற்றை தேர்ந்து எடுத்து, அவற்றை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் பகிர்ந்துக் கொண்டார்.