சிம்புவின் புதிய கெட்டப் படங்கள் வெளிவந்தது

சிம்புவின் புதிய கெட்டப் படங்கள் வெளிவந்தது

107

Simbu News Getup

நடிகர் சிம்பு தற்போது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். அவர் இந்த படத்துக்காக மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்கப்போவ கூறப்பட்டது.

இந்த நிலையில், சிம்பு மூன்று கெட்டப்புகளும் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சிம்பு இப்படத்தில் நடிக்கும் கெட்டப்புடன் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் சிம்புவின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு மேக்கப் போடுவதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் பணியாற்றி வருகிறார்.

இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷை வைத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY