Home Tamil Cinema News சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு, போஸ்டர் வெளியானது

சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு, போஸ்டர் வெளியானது

222

9571_982555685146110_

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த ‘சிங்கம்’ படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து அப்படத்தின் அடுத்த பாகங்களை எடுக்க சூர்யாவும் ஹரியும் விருப்பப்பட்டனர்.

அந்த வரிசையில் ‘சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2’ என்ற பெயரில் வெளிவந்து அதுவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் புதிய தலைப்புடன் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்துக்கு ‘எஸ்-3’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அந்த தலைப்புடன் ஒன்றுக்கும் மேற்பட்ட போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ஒரு போஸ்டர் சிங்கம் முகமும், சூர்யா முகம் ஒன்றாக இணைந்ததுபோன்று அமைந்துள்ளது. மற்றொரு போஸ்டர் சிங்கம் பின்னணியில் சூர்யா கர்ஜிப்பது போன்றவும் அமைந்துள்ளது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுவருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here