Home Tamil Cinema News ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ சிங்கிள் டிராக் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ சிங்கிள் டிராக் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

20

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.

விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் இருந்து `நானா தான வீணா போனேன்’ என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் டிராக்கான `சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தீபாவளியை முன்னிட்டு `சொடக்கு’ பாடலின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், முழு பாடலும் தற்போது வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர் நவம்பரிலும், இசை வெளியீடு மற்றும் டிரைலர் டிசம்பரிலும் நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிற பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாக இருக்கிறது.