Home Tamil Cinema News இயக்குனரின் மீது கோபத்தில் சிவகார்த்திகேயன்

இயக்குனரின் மீது கோபத்தில் சிவகார்த்திகேயன்

145

sivaசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் தான் இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்றுள்ளது. இந்தப்படம் இவரது திரையுலக வாழ்க்கையையே மற்றிவிட்டது எனலாம்.

இருப்பினும் இந்தப்படம் வெளிவருவதற்குள் சிவகர்த்திகேயனுக்கும், படக்குழுவினருக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே போனது.

இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு என்ன தான் பெரிய பெயர் வாங்கி தந்தாலும், படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் லிங்குசாமியுடன் சிவகார்த்திகேயனுக்கு கொஞ்சம் மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாம்.

அந்தக்காரணத்தினால் தான் படத்தின் வெற்றி விழாவிற்கு கூட வரமறுத்துவிட்டாராம். சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.