Home Tamil Cinema News சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு “ரெமோ”

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு “ரெமோ”

153

Siva-Karthikeyan-Movie

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரஜினிமுருகன் திரைப்படம் எதிர்பர்த்த அளவு அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. அதன் பிறகு அவரே தயாரித்து நடித்து வந்த படத்தின் தலைப்பு இன்று வெளிவருவதாக அறிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று 6 மணிக்கு படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு ரெமோ (Remo) என்று தலைப்பு வைத்துள்ளனர். ஷங்கரின் அந்நியன் படத்தில் விக்ரம் ஏற்றிருந்த முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ரெமோ.

அதனால் சிவகர்த்திகேயன் இந்தப்படத்தில் ஹேன்ட்சம் ஹீரோவாக நடிப்பார் என வலைத்தளங்களில் பேசப்படுகின்றது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் மற்றும் பலர் நடிக்க சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்களில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தை இயக்குனர் அட்லியின் துணை இயக்குனர் பாக்கியராஜ் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here