Home Tamil Cinema News மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

101

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் முதன்முறையாக வெளியான இப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இவர்களது கூட்டணிக்கு குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் சிவகார்த்திகேயன்-சூரி பேசும் வசனங்கள் இன்றளவும் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

இரண்டாவது வது முறையாக சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவான ‘ரஜினிமுருகன்’ இந்த வருடம் வெளியானது. லேட்டாக வெளியானாலும் இந்த வருடத்தின் முதல் வெற்றிப்படமாக அது அமைந்தது.

இந்த நிலையில் 3 வது முறையாக சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணைந்த 2 படங்களுமே சூப்பர்ஹிட் என்பதால் இப்படம் குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

மேலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களில் தன்னுடைய காமெடியால் கலக்கிய சூரி இப்படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் மோகன்ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த 2 படங்களுக்குப் பின் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here