Home Tamil Cinema News ரெமோவுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் புது டீம் ரெடி!

ரெமோவுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் புது டீம் ரெடி!

127

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அவருக்கு வில்லனாக மலையாள நடிகர் பஹத் பாசிலும் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரெமோ படத்திற்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் மூலம் அனிருத், சிவகார்த்திகேயனுடன் 6 வது முறையாகவும், நயன்தாரா, பகத் பாசில் முதன்முறையாகவும் கூட்டணி அமைத்துள்ளனர். நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.