Home Tamil Cinema News தமிழில் நடிக்கும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ தன்வி

தமிழில் நடிக்கும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ தன்வி

280

Tanvi-Lonkar

நாகமானிசி இயக்கும் பேய்க்கும், பாம்புக்கும் மோதல் கொண்ட படமாக உருவாகிறது விடாயுதம். ராம் சரவணன், ஸ்லம்டாக் மில்லினர் புகழ் தன்வி லங்கோர் ஜோடி. ஸ்ரீநாகராஜா சர்ப்ப யஷி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் ஆடியோ விழாவில் தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் கலந்துகொண்டு பேசும்போது,’ சிறுமுதலீட்டு படங்கள் வெளியானால்தான் சினிமா நன்றாக இருக்கும்.

தியேட்டர்களில் அதிகம் வெளிவருபவை சிறுமுதலீட்டு படங்கள்தான். சினிமாவை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக இருக்க நிறைய சிறுமுதலீட்டு படங்கள் வரவேண்டும்’ என்றார்.

இதனுடன் இயக்குனர்கள் தருண்கோபி. ஜாக்குவார் தங்கம், ராஜ்கபூர், ஏ.வெங்கடேஷ், நடிகர் சீனிவாசன். நடிகர் பிரஜன், தயாரிப்பாளர்கள் ஜே.கே.ஆதித்யா, ஆர்.என்.ராஜா, மும்பை ரவிச்சந்திரன், ராஜூ, இசை அமைப்பாளர் மிதுன் ஈஸ்வர், விஜயமுரளி கலந்துகொண்டனர். விழா மேடையில் நிஜமான நல்ல நாம்பு மேடை அரங்கு அமைப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.