Home World News சோமாலியாவில் குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு

சோமாலியாவில் குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு

27

மோகாதிஷு: சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276-ஆக அதிகரித்துள்ளது. 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரம் மோகாதிஷு. இங்கு ஓட்டல்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள் நிறைந்த மக்கள் நடமாட்டம் உள்ள பரபரப்பான சந்திப்பு ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் கட்டிடங்கள் பல தரைமட்டமாகின. வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.

அல்கொய்தா அதரவு பெற்ற அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு தான் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி பேசிய சோமாலிய அதிபர் முகமது அப்துல்லாஹி பெர்மஜோ, தீவிரவாதிகள் கொடூர திட்டங்களை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இரக்கமில்லா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.