நாம் செலுத்தும் வரிப்பணம் எல்லாம் எங்கு போகிறது என்று நடிகை சோனாக்ஷி சின்ஹா கேள்வி

நாம் செலுத்தும் வரிப்பணம் எல்லாம் எங்கு போகிறது என்று நடிகை சோனாக்ஷி சின்ஹா கேள்வி

57

Sonakshi Sinha asks, Where All Our Tax Money Goes

மவுன குரு படம் பாலிவுட்டில் அகிரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார். இந்த படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது. அகிராவில் சோனாக்ஷி அதிரடி நாயகியாக நடித்துள்ளார்.

அகிரா படம் குறித்து எடுக்கப்பட்ட பேட்டியில் அவர், மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் இருந்து பந்த்ரா வரை செல்லும்போது அங்குள்ளவற்றை பார்த்தால் நாம் பல வகையான வரிகள் செலுத்துகிறோம் அந்த பணம் எல்லாம் எங்கு தான் போகிறது என்று வியக்கத் தோன்றுகிறது என்கிறு கூறியுள்ளார்.

மேலும், உலகில் பல விஷயங்கள் நடக்கின்றன. அதை எல்லாம் பார்க்கும்போது கோபம் கோபமாக வருகிறது. இது தான் நாம் பேசுவதற்கு சரியான நேரம். உரிமைக்காக நாம் கொடுக்கும் குரல் அனைவருக்கும் கேட்கட்டும் என்றும் கூரியுள்ளார்.

அகிரா படத்தில் சோனாக்ஷி ஒரு பாடலை பாடியுள்ளார். படத்தின் ஹீரோவும், ஹீரோயினும் அவர் தான்.

இயக்குனர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். பாடல் பாடுவது மிகவும் பிடித்துள்ளாக சோனாக்ஷி கூறியுள்ளார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY