Home Tamil Cinema News கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சோனாக்ஷி சின்ஹா

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சோனாக்ஷி சின்ஹா

110

Sonakshi Sinha is now on Guinness Book Records

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கின்னஸ் சாதனை படைக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கலந்துகொண்டார்.

அந்த சாதனையானது, ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் நகத்திற்கு பாலிஷ் போடுவதானாம். நகத்திற்கு பாலிஷ் போடும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் கலந்து கொண்டு தனது நகத்திற்கு பாலிஷ் போட்டார். இதன் மூலம் ஒரு இடத்தில் ஏராளமான பெண்கள் ஒரே சமயத்தில் நகத்திற்கு பாலிஷ் போட்டதற்கான கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு பற்றி சோனாக்ஷி சின்ஹா கூறுகையில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் என் பெயர் இடம்பெற வேண்டும் என எனக்கு குழந்தை பருவத்தில் இருந்தே ஆசை. அந்த ஆசை இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைவேறியுள்ளது.

பெண்கள் மேம்பாடு குறித்து பல பெண்கள் தற்போது குரல் கொடுக்கிறார்கள். நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தால் பெண்கள் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here