Home Tamil Cinema News ட்விட்டரில் சோனாக்ஷி சின்ஹா போட்ட போடு!

ட்விட்டரில் சோனாக்ஷி சின்ஹா போட்ட போடு!

120

sonakshi-sinha

டிவிட்டரில் தன்னைத் விமர்சிக்கும் வகையில் கேள்வி கேட்ட வக்கிரப் புத்தி கொண்ட நபருக்கு மூக்கு உடையும் அளவுக்கு பதில் கொடுத்து விரட்டியடித்தார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

தன்னை கேலி செய்பவர்களை அவர்களது ஸ்டைலிலேயே போய் விரட்டி விடுவது அவரது ஸ்டைலாக மாறியுள்ளது. இந்நிலையில் டிவிட்டரில் தன்னை டார்ச்சர் செய்த நபரையும் இப்படி விரட்டியடித்துள்ளார் சோனாக்ஷி.

பர்தீக் கோயல் என்பவர்தான் இப்படி சோனாக்ஷியிடம் மூக்குடைபட்டு போனவர். டிவிட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார் சோனாக்ஷி. அப்போது கோயல் எப்போது உங்க உடம்பிலிருந்து ஆடை விலகும், எப்ப பிகினி அணியப் போறீங்க என்று கேட்டிருந்தார்.

அதற்கு சற்றும் அசராமல் சோனாக்ஷி ஒரு பதிலை கொடுத்தார். கோயல் அதை உங்களது அம்மா, சகோதரிகளிடம் போய் முதலில் கேளுங்கள். பிறகு என்னிடம் திரும்பி வாருங்கள் என்று கூறியிருந்தார்.

அத்தோடு நில்லாமல், இவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். நானும் பதில் சொல்லியிருந்தேன். அதன் பிறகு அவரிடமிருந்து பதில் இல்லையே என்று கூறி #shametheshameless என்றும் டேக் செய்திருந்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here