இரட்டை அர்த்த வசனம் பேச மறுப்பு தெரிவித்த சூரி

இரட்டை அர்த்த வசனம் பேச மறுப்பு தெரிவித்த சூரி

140

rummy-review

நகைச்சுவை நடிகர் சூரி ஒரு பேட்டியில் இனி நான் இரட்டை அர்த்த வசனங்கள் பேச மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் பேசும்போது, “மருது, இது நம்ம ஆளு, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என ஹாட்ரிக் வெற்றி அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லா ஹீரோக்களுக்குமே பொருத்தமான காமெடியன் என்று என்னை குறிப்பிடுகின்றனர்.

அது எனக்கு கிடைத்த வாழ்த்தாக நான் கருதுகிறேன். ஹீரோவா நடிக்க ஆசை எனக்கு கிடையாது. அதேபோல் எந்த பட்டப்பெயரும் எனக்கு வேண்டாம். இப்போது சோற்றை குழப்பியடிப்பதுபோல் எல்லா பாத்திரத்திலும் நடிக்க முடிகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் எனது நகைச்சுவையை விரும்பி பார்க்கிறார்கள். அதனால் இரட்டை அர்த்த வசனங்கள் நான் பேச மாட்டேன். அப்படி பேச சொன்னாலும் அதனை மாற்றும்படி இயக்குனரிடம் கேட்டுக்கொள்வேன். சினிமாவில் சரித்திரம் படைத்த நாகேஷ் போட்ட பாதையில் செல்ல விரும்புகிறேன்.

அவர் பாணியில் நடிப்பதாக கூறினால் அது எனக்கு 100 ஆஸ்கர் விருது கிடைத்தற்கு சமம்.

தற்போது கத்திச்சண்டை, எஸ்3, சங்கிலி புங்கிலி கதவதிற மேலும் பாண்டிராஜ், சுசீந்திரன், அதர்வா ஆகியோர் படங்களில் நடித்து வருகிறேன் என்று சூரி கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY