Home Tamil Movie Reviews ‘ ஸ்பைடர் ‘- விமர்சனம்

‘ ஸ்பைடர் ‘- விமர்சனம்

112
SHARE
Theneo tv ratings
  • Ratings

Summary

ஒரு காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவை பிடிக்க பெண்களை வைத்தே மகேஷ்பாபு போடும் திட்டம் தியேட்டரில் விசில் பறப்பது உறுதி.மொத்தத்தில் மகேஷ் பாபுவிற்கு தமிழில் ஸ்பைடர் நல்ல எண்ட்ரீ என்றாலும்,சுமாரான படம்.

2.5
நடிகர்கள்  மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங்,
ஒளிப்பதிவு  சந்தோஷ் சிவன்
இசை  ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்  ஏ ஆர் முருகதாஸ்

தான் ஒரு பெரிய இயக்குனர் என்பதை முருகதாஸ் மீண்டும் நிரூபித்துள்ளார். படத்தின் கதை மற்றும் திரைக்கதை அருமையாக இருக்கிறது. மகேஷ்பாபு மற்றும் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக உள்ளது.சிறுவயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்துள்ள சிறுவனின் நடிப்பு சூப்பர். 

மகேஷ் பாபு போலிஸிற்கு தெரியாமல் ஊரில் நடக்கும் அசம்பாவிதங்களை தன் மக்களின் போனை ட்ராக் செய்து கண்டுப்பிடிக்கின்றார். அப்படி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை தெரிந்துகொண்டு போலிஸ் வருவதற்குள் காப்பாற்றுகின்றார்.

அந்த சமயத்தில் ஒரு பெண் இரவில் தனியாக பயந்து இருக்கிறாள் என்பதை மகேஷ்பாபு தெரிந்துகொண்டு ஒரு பெண் போலிஸை அந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.

அடுத்த நாள் அந்த இரண்டு பேரும் உடல் வெட்டப்பட்டு கொடூரமான நிலையில் இறந்துகிடக்கின்றனர். அதை தொடர்ந்து அந்த கேஸை மகேஷ் பாபு தேடிச் செல்ல மனிதர்களை கொன்று அதில் சந்தோஷம் அடையும் எஸ்.ஜே.சூர்யாவை அவர் கண்டுபிடித்து அதன்பின் இருவருக்குமிடையே நடப்பது தான் மீதி கதை.

படத்தின் ஒட்டுமொத்த பலமே எஸ்.ஜே.சூர்யா தான், நெகட்டிவ் கதாபாத்திரம் இனி குவியும். அதிலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ப்ளாஷ்பேக்கில் வரும் சிறுவன் மிரட்டியுள்ளான். இன்னும் எஸ்.ஜே.சூர்யாவிற்கான காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.

படம் ஆரம்பித்து அரை மணி நேரம் ஏன் இப்படி, எதற்கு இந்த காட்சிகள் என்று தான் நகர்கின்றது. அதிலும் ராகுல் ப்ரீத் சிங் எல்லாம் எதற்கு வருகின்றார் என்றே தெரியவில்லை, அவரின் கதாபாத்திரம் மிக மோசமான சித்தரிப்பு.

என்ன தான் ஹீரோயின் போஷன் டல் என்றாலும், ஒரு காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவை பிடிக்க பெண்களை வைத்தே மகேஷ்பாபு போடும் திட்டம் தியேட்டரில் விசில் பறப்பது உறுதி.

மொத்தத்தில் மகேஷ் பாபுவிற்கு தமிழில் ஸ்பைடர் நல்ல எண்ட்ரீ என்றாலும்,சுமாரான படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here