Home Tamil Cinema News ஸ்ரீதிவ்யா சென்னை மக்களுக்காக வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கினார்

ஸ்ரீதிவ்யா சென்னை மக்களுக்காக வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கினார்

115

sri

தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு பல ஊர்களில் இருந்தும் , நடிகர்களிடமிருந்தும் நன்கொடை வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

இதன் மூலம் நல்ல நடிகை என்று மட்டும்மில்லாமல் நல்ல உள்ளம் படைத்தவர் என்று சென்னை மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா.