Home Tamil Cinema News பிரேமம் ரீமேக் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்

பிரேமம் ரீமேக் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்

512

[Not a valid template]

மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான பிரேமம் திரைப்படம் தெலுங்கில் ‘மஜ்னு’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இதில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். இவர்களில் நாக சைதன்யாவைவிட ஸ்ருதி 10 வயது இளையவர். கல்லூரி ஆசிரியையாக நடிக்கும் ஸ்ருதியை மாணவர் நாக சைதன்யா காதலிப்பதுபோல் கதாபாத்திரம் அமைந்துள்ளது.

கிளாமர் வேடங்களில் நடித்துவரும் ஸ்ருதிக்கு ஆசிரியை வேடத்தில் அடக்க ஒடுக்கமாக நடிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால் அந்த வேடம் தனக்கு பொருந்துமா என்பதை அறிய ‘பிரேமம்’ படத்தை பார்த்தார்.

கதாபாத்திரம் பிடித்திருக்கவே நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த பாத்திரத்துக்காக முற்றிலும் மேக்அப் போடாமல் நடிக்கிறார் ஸ்ருதி. இந்தப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் காட்டன் சேலை உடுத்தி நடிக்கிறார். இதற்கான தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதுபற்றி வீட்டில் அவர் அணிந்து பார்த்து தனக்கு சரிப்பட்டு வரும் என்ற பிறகே நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் நடித்த போது எடுத்த புகைப்படங்கள் கசிந்தது. இதில் மலர் கதாபாத்திரத்தில் உயிர் கொடுத்து நடித்தார் அனுபல்லவி. ஆனால் கிளாமர் வேடங்களில் நடித்து வரும் ஸ்ருதிக்கு மலர் கதாபாத்திரம் சுத்தமாக பொருந்தவில்லை. அதுவும் சில புகைப்படங்கள் வெளிவந்ததும் ஸ்ருதி சோனியா காந்தி போல் இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகிறன்றனர்.

மலர் டீச்சராக ஸ்ருதிஹாசனை பலரும் ஏற்க மறுத்து வருகின்றனர். இதெல்லாம் செட் ஆகதே என்றும் கூறியுள்ளனர். சாய் பல்லவி மீது ஏன் இந்த காதல்? ஸ்ருதி ஹாசன் மீது ஏன் இத்தனை வெறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஒருவர் சமூகவலைத்தளவாசி.

அதேநேரத்தில் சமூக வலைத்தளங்களில் கிண்டலாக வெளியாகும் மீம்ஸ்கள் தன்னை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த கதாபாத்திரம் நீண்ட நாட்கள் எனக்கு கிடைத்திருக்கும் அருமையான ஒன்று. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்தப் படம் வெளியாகும்போது எப்படியும் தனது நடிப்பின் மூலம் அசத்துவார் ஸ்ருதி என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.