Home Tamil Sports News ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளை வென்றது ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம்

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளை வென்றது ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம்

22

2018-ம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் டி20 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு உரிமைகளை ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் வென்றுள்ளது.

இதன் மூலம் பிசிசிஐ ரூ.16,347.5 கோடி (2.55 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வருவாய் ஈட்டியுள்ளது.

உலகம் முழுதிற்குமான ஒட்டுமொத்த தொலைக்காட்சி நேரலை மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஸ்டார் இந்தியா தட்டிச் சென்றது.

2009-ம் ஆண்டு சோனி தொலைக்காட்சி நிறுவனம் 1.63 பில்லியன் டாலர்கள் தொகைக்கு நேரலை ஒளிபரப்பு உரிமைகளை வென்றது. ஆனால் இந்தத் தொகை 9

ஆண்டுகளுக்கானது, காரணம் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் பிசிசிஐ-யிடமிருந்து 918 மில்லியன் டாலர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான உரிமையைப் பெற்றிருந்தது.

வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப்பிடமிருந்து சோனி நிறுவனம் ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றது. இந்த ஒப்பந்த சுழற்சி 2017-ல் முடிவுக்கு வந்தது.

இந்த ஒளிபரப்பு உரிமைகள் ஏலத்திற்கு ஸ்டார் மற்றும் சோனி நிறுவனங்களே தகுதி பெற்ற இரண்டு நிறுவனங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

மொத்தம் 14 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் அனுப்பின. இந்தியாவில் தொலைக்காட்சி, இந்தியாவில் டிஜிட்டல், அமெரிக்கா, ஐரோப்பா உரிமைகள், மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகள் ஆகியவை ஒப்பந்த வகைகளாகும். 5 பன்னாட்டுச் சந்தைகளின் தொலைக்காட்சி, மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஸ்டார் இந்தியா ஒட்டுமொத்தமான ஒப்பந்தப் புள்ளியில் தட்டிச் சென்றது. எந்த ஒரு தனித்த ஒப்பந்தத் தொகையை விடவும் இது பெரிய தொகையாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here