Home Tamil Cinema News பெண்களை இழிவுபடுத்தி ஆபாச பாடல் பாடியதால் சிம்பு இன்று கைதாகிறாரா?

பெண்களை இழிவுபடுத்தி ஆபாச பாடல் பாடியதால் சிம்பு இன்று கைதாகிறாரா?

166

simbu-with-anirudh

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது பீப் பாடல் தான். இப்பாடலுக்கு அனிருத் இசையமைக்க, சிம்பு பாடியதாக கூறப்படுகின்றது.

பெண்களை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். பின்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது சிம்பு, அனிருத் ஆகியோரின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் போலீசார் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோவை போலிஸார் இன்று சென்னை வந்தனர். இதை தொடர்ந்து சிம்பு கைதாவார் என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகின்றதாம்.