Home Tamil Cinema News கால்ஷீட் தர மறுத்தால் பலமான காரணம் இருக்குமென ராகுல் ப்ரீத் சிங் பேச்சு!

கால்ஷீட் தர மறுத்தால் பலமான காரணம் இருக்குமென ராகுல் ப்ரீத் சிங் பேச்சு!

126

Rakul-Preet-Singh

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். இவர் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து திடீரென்று விலகினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,

அவர், ‘எனக்கு வரும் எல்லா படங்களையும் நான் ஒப்புக்கொள்ள விரும்பினாலும் அல்லது ஒதுக்க நினைத்தாலும் அதற்கு காரணம் இருக்கிறது. என்னை தேடி வரும் வாய்ப்புகளில் பெரும்பாலும் கதை, கதாபாத்திரம், ஹீரோ, இயக்குனர் போன்ற அம்சங்களில் சில ஒரே மாதிரி இருக்கும்.

எல்லா படத்திலும் ஹீரோயினாக என்னால் நடிக்க முடியாது. வருடத்தில் 365 நாட்கள்தான் நான் கால்ஷீட் தர முடியும். சில சமயம் கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்து நடிக்கலாம். கால்ஷீட் இல்லை என்று நான் கூறினால் அதற்கு பின்னால் பலமான காரணம் இருக்கும்’ என்று கூறினார்.