மெரினாவில் தடியடி நடத்தி பெண்களின் உடைகளை கிழித்த போலீசார்!

மெரினாவில் தடியடி நடத்தி பெண்களின் உடைகளை கிழித்த போலீசார்!

29

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த போராட்ட பகுதியில் நேற்று முதலே போலீசார் குவிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டடு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். பெண்கள், தாய்மார்கள் என்றும் பாராமல் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறியோடினர்.

அந்த சமயத்தில் பல பெண்களின் ஆடைகளை போலீசார் கிழித்ததாக கூறப்படுகிறது. தடியடியோடு நிறுத்தாமல் பெண்கள் மீது கைவைத்து அவர்களின் ஆடைகளை கிழித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் மாணவர்கள் மிகுந்த ஆக்ரோசத்துடன் போராட்டத்தினை நடத்திவருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY