Home Tamil Breaking News ‘நீட்’ எதிர்ப்பு – தொடர் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

‘நீட்’ எதிர்ப்பு – தொடர் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

23

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று 8-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னை பெரம்பூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டி யில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புறநகர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சேலத்தில் 21 அமைப்புகளைச் சேர்ந்தோர் நேற்று நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தரும புரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 500 பேர் பல்கலைக்கழக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் நேற்று 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூரில் ரயிலை மறிக்க முயன்ற ஆதி தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர். திருவாரூரில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சா வூர் தலைமை அஞ்சலம் அருகில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி யில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் ஏறி இந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம்., அரசு மகளிர் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here