Home Tamil Cinema News திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை வித்யா பாலன்

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை வித்யா பாலன்

131

322540,xcitefun-vidya-balan-signature-saree-3

பாலிவுட் சினிமாவில் அனைவரின் டாப் மோஸ்ட் பேவரட் நாயகி வித்யா பாலன். இவர் நியூ இயரை கொண்டாடுவதற்காக தன்னுடைய கணவர் சித்தார்த் ராய் கபூருடன் வெளிநாடு புறப்பட்டுள்ளார். விமானத்திலேயே வித்யா பாலனுக்கு திடீரென்று முதுகில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் வித்யாபாலனை, சித்தார்த் அட்மிட் செய்தார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரகக் கற்கள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் வித்யாபாலன் அதனால் தன்னுடைய உடல்நிலையை கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறுகின்றனர்.

தற்போது வித்யாபாலன் நன்றாக இருப்பதாக அவரது செய்தியாளர் தெரிவித்து இருக்கிறார். இதனால் தற்போது புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை தள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் வித்யாபாலன் – சித்தார்த் தம்பதி.