Home Tamil Cinema News சன்னியை எப்படியாவது பார்த்து விட வேண்டும்… பேனரை கிழித்து பார்த்த முரட்டு ரசிகர்!

சன்னியை எப்படியாவது பார்த்து விட வேண்டும்… பேனரை கிழித்து பார்த்த முரட்டு ரசிகர்!

39

கொச்சி : நடிகை சன்னி லியோன் கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தந்த போது மேடையில் இருந்த பேனரை கிழித்துக் கொண்டு வந்து தலையை விட்டு பார்த்த முரட்டு பக்தரின் படங்கள் சமூக வலைதளங்களில் ரகளை கிளப்பி வருகிறது. பாலிவுட் நடிகை சன்னிலியோன் கேரள மாநிலம் கொச்சி எம்.ஜி. சாலையில் ஒரு செல்போன் நிறுவன ஷோரூமை திறந்து வைப்பதற்காக சவருகை தந்து இருந்தார். கேரள ரசிகர்கள் சன்னிலியோனை பார்க்க திரண்டதால் கொச்சியில் 2 மணி நேரத்திற்கு மேல் வாகன போக்குவரத்தே ஸ்தம்பித்து விட்டது. கேரளாவில் நடிகர், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது. தமிழ், தெலுங்கு பட உலகில் இருப்பதுபோல ரசிகர் மன்றங்கள், கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், நடிகைகளுக்கு கோவில் கட்டுவது என்பதெல்லாம் அங்கு கிடையாது. இந்த நிலையில் சன்னிலியோனை பார்க்க திரண்ட ரசிகர்கள் கூட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முரட்டு ரசிகர்: சன்னிலியோனை பார்க்கத் திரண்ட ரசிகர்களின் கூட்டம் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடுமையின் உச்சகட்டமாக சன்னிலியோனை பார்த்துவிட வேண்டும் என்று அவர் நின்றிருந்த மேடைக்கு பின்புறம் போடப்பட்டிருந்த பேனரை கிழித்துக் கொண்டு தலையை விட்டு சன்னிலியோனை பார்த்து ரசித்து பிறவிப் பலனை அடைந்துள்ளார் ஒரு முரட்டு ரசிகர்.

வாழ்க ரசிகர்கள்: வாழ்க இளைஞர்களின் நடிகை மோகம் என்பதைத் தவிர இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரசிகர்களை பார்க்கத் திரள்வதில் தமிழகத்தினரை மிஞ்சிவிட்டனர் கேரள இளைஞர்கள்.