கபடிப் போட்டியில் தேசிய கீதம் பாடி சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன்!

கபடிப் போட்டியில் தேசிய கீதம் பாடி சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன்!

81

Sunny Leone in Trouble after Singing National Anthem at Pro Kabaddi League

நடிகை சன்னி லியோன் நீலப்பட நடிகையாக இருந்து பிரபலமானார், இவர் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து ஐபிஎல் பாணியில் கபடி போட்டித்தொடரை நடத்தி வருகின்றன. அதன்படி, நான்காம் ஆண்டு ப்ரோ கபடி தொடரின் நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் தான் சன்னி லியோன் தேசிய கீதம் பாடுவதற்காக அழைக்கப்பட்டார். அதற்காக தேசிய கீதத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் பாட தீவிர பயிற்சி மேற்கொண்டார் சன்னி லியோன். பயிற்சியின் பலனாக விழாவில் தன் இனிய குரலில் தேசிய கீதத்தைப் பாடி பார்வையாளர்களை அவர் அசத்தியுள்ளார்.

இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சன்னி லியோன், இதற்காக பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவிய தன் குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மும்பை நிகழ்ச்சியில் சன்னி லியோன் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக உல்லாஸ் என்பவர் டெல்லியில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.

சன்னி லியோன் தேசிய கீதத்தை பாடும்போது வார்த்தைகளை சரியாக உச்சரிக்கவில்லை என்று உல்லாஸ் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். பாடும் முன்பு சன்னி முறையாக பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்கிறார் உல்லாஸ்.

ஒரு பிரபலமான நடிகையான சன்னி தேசிய கீதத்தை தவறாக பாடினால் அது அவரது ரசிகர்களை பாதிக்கும் என்று உல்லாஸ் தெரிவித்துள்ளார். இதனால் சன்னிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது உல்லாஸ் போலீசில் புகார் அளித்தார். கொல்கத்தாவில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய டி20 போட்டியின் துவக்க விழாவில் அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியாக அவர் மீது புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY