Home Tamil Cinema News கவர்ச்சி படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறும் சன்னி லியோன்!

கவர்ச்சி படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறும் சன்னி லியோன்!

110

Sunny-Leone

நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். அவர் ஒரு பேட்டியில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தற்பொழுதிருந்து தொடர்ந்து கவர்ச்சி படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.

எனினும், வருங்காலத்தில் சரியான கதை உள்ள படங்கள் அமைந்திட்டால் அதில் நடிப்பது குறித்து பரிசீலிப்பேன் என கூறியுள்ளார். இது போன்ற படங்களை தயாரிக்க விரும்புவது என்பது ஒன்றும் அதிர்ச்சிக்குரிய விசயமில்லை.

ஆனால் அதே வேளையில் இது போன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டால், பின்னர் மக்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கவர்ச்சி படங்களில் நடிப்பதை விடுத்து நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க விரும்பும் தனது எண்ணத்தை தொடர்ந்து அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதத்தில் அவர் அளித்த பேட்டியில், என்னை ஆபாச பட நடிகை என்று பலரும் ஒதுக்குகிறார்கள். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர்களும் கண்டு கொள்ளவில்லை. இதற்காக நான் துவண்டு விடவில்லை என்று கூறியுள்ளார்.