Home Tamil Cinema News ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவும் சூப்பர் சிங்கர்ஸ்

ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவும் சூப்பர் சிங்கர்ஸ்

53

vijay-tv-super-singer

இசை ஜாம்பவான் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் கடந்த வருடம் மரணமடைந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எம்.எஸ்.வியில் ராஜாவும், ரஹ்மானும் என்ற பெயரில் இசைக்கச்சேரி ஒன்று வரும் 16ம் திகதி நடைபெற உள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள க்ரோய்டான் நகரில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் பல மேடைகளில் பங்கேற்ற 50 இசைக்கலைஞர்களுடன் சூப்பர்சிங்கர்ஸ் மூலம் பிரபலமான சத்யபிரகாஷ், சோனியா இருவரும் பாடவுள்ளனர்.

லங்காசிறியின் ஊடக ஆதரவில் நடத்தும் இந்நிகழ்ச்சில் எம்.எஸ்.வியின் மகன் முரளி விஸ்வநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கவுள்ளனர்.