அமெரிக்காவில் தனிமையில் நடைபயிற்சி செல்லும் ரஜினி!

அமெரிக்காவில் தனிமையில் நடைபயிற்சி செல்லும் ரஜினி!

50

Superstar Rajini Walking in Streets of United States

ரஜினி தற்போது அமெரிக்காவுக்கு ஓய்வுக்காக சென்றுள்ளார். அதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், சமீபத்தில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினா நகரில் உள்ள சச்சிதானந்தா சுவாமிகளின் ஆசிரமத்தில் சாமி கும்பிடுவது போன்ற படங்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

அதையடுத்து அமெரிக்காவில் ரஜினி திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் ‘கபாலி’ படத்தை பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் ரஜினி வாக்கிங் செல்லும் காட்சிகள் தற்போது வீடியோவாக வெளிவந்துள்ளது.

காரில் சென்ற ஒருவர் சாலையின் ஓரத்தில் தனி ஒரு ஆளாக வாக்கிங் செல்லும் ரஜினியை கண்டதும், அதை தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார். காரில் இருந்தபடியே ரஜினிக்கு டாட்டா காட்டும் அந்த ரசிகரை நோக்கி ரஜினியும் டாட்டா காட்டிவிட்டு நடந்து செல்கிறார்.

இந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஜினிகாந்த் வாக்கிங் செல்லும் காட்சிகள் இணையதளங்களில் வெளியானதால், அவர் நலமுடன் இருக்கின்றார் என்ற செய்தியை அறிந்துகொண்ட அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY