Home Tamil Cinema News 24 படத்தில் சூர்யாவின் வில்லத்தனத்தை கண்டு புகழும் ரசிகர்கள்

24 படத்தில் சூர்யாவின் வில்லத்தனத்தை கண்டு புகழும் ரசிகர்கள்

135

 

surya-samantha-24-movie-still

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ’24’. இப்படத்தில் சூர்யா மூன்று விதமான கதாபத்திரங்களில் அசத்தியுள்ளார்.

இப்படத்தில் சூர்யா நடித்திருக்கும் ஒரு கதாபாத்திரமான ஆத்ரேயாவோட வில்லத்தனம் அட்டகாசமாக உள்ளதெனவும், படத்தில் ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட் தரத்தில் மிரட்டியிருப்பதாகவும் சூர்யாவைப் புகழ்ந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

மேலும், ரசிகர்கள் இப்படத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை பிருந்தா திரையரங்கில் 80 அடியில் படத்தின் வில்லன் ஆத்ரேயா கட் அவுட் வைத்துள்ளனர், அதுமட்டுமில்லாமல் விஜய் அஜித் படங்களின் ஓபனிங் போலவே இப்படத்துக்கும் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

24_80feet