மீண்டும் தள்ளிப்போன சிங்கம் 3, பிப்ரவரி 9-ம் தேதி வெளியிட முடிவு

மீண்டும் தள்ளிப்போன சிங்கம் 3, பிப்ரவரி 9-ம் தேதி வெளியிட முடிவு

12

நடிகர் சூர்யாவின் ‘சிங்கம் 3’ படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில் படம் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இந்தப் படத்தை வெளியிடுவதற்கான தேதியை படக்குழு பலமுறை மாற்றியது. ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் படத்தை வெளியிட படக்குழு தயங்கி வந்தது. ஒருவழியாக குடியரசு தினத்தன்று வெளியிட முடிவு செய்யப்பட்டு ரிலீஸுக்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம், போலீஸ் தடியடி என்ற நிலைமை உருவானதால் இந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்யவில்லை.

இந்நிலையில் பிப்ரவரி 9-ம் தேதி சி3 ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் `சிங்கம் 3′ படம் தள்ளிப்போனதால், லக்ஷமன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்சாமி நடித்துள்ள `போகன்’ படத்தை பிப்ரவரி 2-ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

முன்னதாக `போகன்’ பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

LEAVE A REPLY