Home Tamil Cinema News சாதனையை தவற விட்ட சூர்யா!

சாதனையை தவற விட்ட சூர்யா!

170

24-Tamil-movie

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்டவராவார். இவர் படங்களுக்கான எதிர்ப்பார்ப்பு தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் அதிகம்.

இந்நிலையில் நேற்று சூர்யாவின் 24 டீசர் வெளிவந்தது. இந்த டீசர் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே மிரட்டலாக அமைந்தது. ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கெத்தை காட்டும் இடமே இந்த டீசர், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் சாதனைகளில் தான். இதில் எப்போதும் விஜய், அஜித் ரசிகர்களே மின்னோடியாக இருக்கின்றனர்.

இருப்பினும், சூர்யா ரசிகர்கள் இதை முறியடிப்பார்கள் என எதிர்ப்பார்த்த நிலையில் 24 டீசர் வெளிவந்து தற்போது வரை 8 லட்சத்திற்கும் அதிகமான ஹிட்ஸ் மற்றும் 51 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் விஜய், அஜித் படங்களின் சாதனையை முறியடிக்க 24 தவறிவிட்டது.