Home Tamil Cinema News சூர்யாவின் ’24’ படத்தில் முக்கிய ரோலில் ‘வாட்ச்

சூர்யாவின் ’24’ படத்தில் முக்கிய ரோலில் ‘வாட்ச்

225

24 First Look 10

ஹாலிவுட்டில் டைம் டிராவல் படங்கள் அவ்வப்போது வரும். தமிழில் அதுபற்றி யோசிக்காத நிலையில் விஷ்ணு நடித்த ‘இன்று நேற்று நாளை’ படமும் டைம் டிராவல் படமாக தயாரானது.

அதேபாணியில் சூர்யா நடிக்கும் ‘24’ படமும் தயாராகி உள்ளது. இதில் சூர்யா 3 மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். சகோதரர்கள் இருவர், விஞ்ஞானி ஒருவர் என 3 வேடம். படத்தின் அடிப்படை என்பது டைம் டிராவல் என்பதால் அதில் குழப்பம் வராமல் டீம்கள் பிரிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.

வாட்ச் ஒன்று படத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.விக்ரம் குமார் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான இசை அமைக்கிறார். 24 என்பது நேரத்தை குறிப்பிடுகிறது. இதற்காக சூர்யாவுக்கு பிரத்யேகமான உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.