Home Tamil Cinema News 24 பட போஸ்டர்களில் மிரட்டும் சூர்யா!

24 பட போஸ்டர்களில் மிரட்டும் சூர்யா!

183

24 Surya

சூர்யா நடித்துள்ள ‘24’ படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக இதில் சமந்தா நடித்துள்ளார். தற்போது இந்த மிரட்டல் போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது.

இதில் சூர்யா மிகவும் வயதானவர் போல், அடர்ந்த தாடி, அழுக்கான முகம், கலைந்த தலைமுடி, மிரட்டும் கண்கள் கூன் விழுந்து ஒரு வீல் சேரில் இருப்பது போல் உள்ளது.

இந்த புகைப்படம் இந்திய அளவில் பலராலும் ரசிக்கப்பட்டது. தற்போது இதை வைத்தே பலரும் படத்தின் கதையை சமூக வலைத்தளங்களில் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த போஸ்டரை பார்க்கும்போதே திகிலூட்டும் விதமாக இருக்கிறது.

இதை பார்க்கும்போது இந்த படத்திற்காக சூர்யா தனது அதிகபட்ச உழைப்பை கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. இப்படம் டைம் மெஷின் சம்பந்தப்பட்ட கதை. இந்த படத்தில் சூர்யா 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கப்போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.