Home Tamil Cinema News தெறி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர்

தெறி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர்

161

CcorGfdXEAAV0QP

டி.ராஜேந்தர் தற்போது விஜய் நடிக்கும் தெறி படத்தில் ஒரு குத்து பாட்டு பாடியுள்ளாராம். அவரது அந்த கணத்த குறலில் பேசினாலே அனல் பறக்கும், பாடினால் சொல்லவா வேண்டும்.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெறி ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தின் பாடல்களை அனைவரும் எதிர்பார்த்துகொண்டிருக்கும் நிலையில், ஆடியோ வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

டி.ஆர் புலி படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் ‘இது அசத்தலான புலி, அசால்டான புலி, ஆரவாரமான புலி’ என மூச்சு விடாமல் விஜய் புகழ்ந்து பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது தெறி படத்திலும் அவர் பாடியிருப்பதால், படத்தில் அனல் தெறிக்குமென்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.