Home Tamil Breaking News இந்தியத் தொழிலாளர்களின் இரத்தம் மற்றும் வியர்வையால் கட்டப்பட்ட தாஜ்மஹால்..

இந்தியத் தொழிலாளர்களின் இரத்தம் மற்றும் வியர்வையால் கட்டப்பட்ட தாஜ்மஹால்..

64
SHARE

லக்னோ : உத்தரபிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் நேற்று முன்தினம் நடந்த ஒரு விழாவில் பேசுகையில், “தாஜ்மகால் அவமான சின்னம். அது துரோகியால் கட்டப்பட்டது” என்று கூறினார். அவர் தனது பேச்சின்போது, “முகலாய மன்னர்கள் இந்தியாவுக்கு துரோகம் செய்தவர்கள். அவர்களை பெருமைப்படுத்தும் சிலர், இந்து மன்னர்களை இருட்டடிப்பு செய்கிறார்கள்” என்றார்.

சங்கீத் சோம் எம்.எல்.ஏ.யின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. முஸ்லிம் கட்சிகள் சங்கீத் சோமுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ- இட்டை ஹாதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் ஒவைசி இது தொடர்பாக கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தாஜ்மகால் துரோகியால் கட்டப்பட்டது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளார். அப்படியானால் இனி சுற்றுலா பயணிகள் தாஜ்மகாலை பார்க்க வரக்கூடாது என்று உத்தரபிரதேச அரசு தடை விதிக்குமா? டெல்லியில் உள்ள செங்கோட்டையைக் கூட துரோகிகள்தான் கட்டினார்கள். அப்படியானால் பிரதமர் மோடி அந்த செங்கோட்டைக்கு சென்று தேசியக்கொடி ஏற்றாமல் இருந்து விடுவாரா?”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து பா.ஜ.க. சார்பில் இதற்கு விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “முஸ்லிம் மன்னர்கள் இந்து பண்பாட்டை சீரழித்தனர் என்பது உண்மையே. ஆனால் முகலாய மன்னர்கள் மீது பா.ஜ.க. வெறுப்பு காட்டவில்லை. அதேசமயத்தில் பா.ஜ.க.வினருக்கு தனிப்பட்ட கருத்து கொண்டிருக்க உரிமை உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 25-ம் தேதி ஆக்ரா செல்லும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தாஜ்மஹால் மற்றும் பிற நினைவுச் சின்னங்களையும் பார்வையிடுகிறார்.

இது குறித்து அவர் கூறும் போது :

அது யார் கட்டினார்கள் என்பது தேவை இல்லை என்ன காரணத்திற்காக கட்டினார்கள் என பார்க்க வேண்டும். அது இந்தியத் தொழிலாளர்களின் இரத்தம் மற்றும் வியர்வையால் கட்டப்பட்டது. அயோத்தியில் தீபாவளிக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறோம், இது ஒரு உலகதர நிகழ்வு ஆகும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here