Home Tamil Cinema News விஜய் இயக்கும் படத்தில் தமன்னா

விஜய் இயக்கும் படத்தில் தமன்னா

136

tamanna-hot

நடிகை தமன்னாவுக்கு தமிழில் முன்பு சரிவர பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் அவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். பிறகு அவர் தெலுங்கு, தமிழிலில் நடித்து வெளியான பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு தமன்னா பிஸியாகிவிட்டார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது தமிழில் தர்மதுரை, தோழா ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சோனு சுத் நடிக்கவுள்ளார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here