குதிரையேற்றப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகை தமன்னா

குதிரையேற்றப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகை தமன்னா

98

Tamanna Practicing Horse Ride For Baahubali 2

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட கலைஞர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர்.

முதல் பாகத்தில் கத்திச் சண்டை, வில் அம்பு எய்தல் என அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை தமன்னா. இந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவர் குதிரைகளில் வந்து சண்டையிட இருக்கிறாராம்.

முன்னதாக ருத்ரமாதேவி உள்ளிட்ட சரித்திரப் படங்களில் நடித்திருப்பதால் அனுஷ்காவிற்கு குதிரையேற்றம் தெரியும். ஆனால், தமன்னா இந்தப் படத்திற்காகத் தான் குதிரையேற்றம் கற்றுள்ளார். அதற்காகவே, பூஜா எனப் பெயரிடப்பட்டுள்ள குதிரையுடன் தினமும் குதிரையேற்றப் பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம்.

குதிரையோடு தான் நிற்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தமன்னா. முதல் பாகத்தைப் போலவே பிரம்மாண்டமாக உருவாகும் பாகுபலி பாடம் இரண்டு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY