Home Tamil Cinema News மலேசியாவில் தமிழ் புதுமுக நாயகன் கேசவன் மரணம்

மலேசியாவில் தமிழ் புதுமுக நாயகன் கேசவன் மரணம்

125

kesavan

மலேசிய நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த கககபோ பட நாயகன் கேசவன் உடல் மீட்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வந்த கககபோ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கேசவன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தவாரம் இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. இந்நிலையில், அப்பட நாயகன் கேசவன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தோடு மலேசியா சென்றார்.

நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் பெற்றோருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற கேசவன், எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த மலேசிய போலீசார் கேசவன் உடலைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர் பிணமாக மீட்கப்பட்டார். கேசவனின் இந்த மரணம் கககபோ படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.