நிக்கி கல்ராணியால் கலக்கத்தில் இருக்கும் மற்ற நடிகைகள்!

நிக்கி கல்ராணியால் கலக்கத்தில் இருக்கும் மற்ற நடிகைகள்!

133

Tamil Actress Tense about Nikki Galrani

நடிகை நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங் படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் யாகாவாராயினும் நாகாக்க ஆதி ஜோடியாக நடித்தார், பாபி சிம்ஹா ஜோடியாக கோ2 படத்திலும் நடித்தார்.

இருப்பினும் நிக்கி கல்ராணிக்கு பெரிய அடையாளமாக அமைந்தது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றி தான். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளது.

தற்போது நிக்கி கல்ராணி கையில் இப்போது ஐந்து படங்கள். லாரன்ஸ் ஜோடியாக மொட சிவா கெட்ட சிவா, ஜிவிபிரகாஷ் ஜோடியாக கடவுள் இருக்கான் கொமாரு, விக்ரம் பிரபு ஜோடியாக நெருப்புடா படங்களில் நடித்து வருகிறார்

இதற்கு காரணம் சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என்ற பாகுபாடு பார்க்காமல் எல்லோருடனும் சமமாக நட்பு பாராட்டுவது தானாம். நட்பு வட்டத்தில் இல்லாத ஆளாக இருந்தாலும் வலிய பேசி நட்பு வட்டத்தில் இணைத்துவிடுகிறாராம். இதனால் மற்ற நடிகைகள் சற்று கலக்கத்தில் உள்ளனராம்.

NO COMMENTS

LEAVE A REPLY