சாலையில் பேயை பார்த்து பயந்த நடிகர் சூரி – வீடியோ இணைப்பு

சாலையில் பேயை பார்த்து பயந்த நடிகர் சூரி – வீடியோ இணைப்பு

146

Soori Real Ghost Encounter

நடிகர் சூரி படப்பிடிப்புக்காக தனது காரில் டிரைவருடன் பழனிக்கு சென்றார். அப்போது நெடுஞ்சாலையில் ஒரு உருவம் நின்றுக்கொண்டிருக்க, காரை நிறுத்தும்படி டிரைவரிடம் அலறியபடி சூரி சொல்ல, டிரைவரோ ‘சார் வேறு பக்கம் போயிடலாம் சார்’ என்று பயந்த குரலில் சொல்கிறார்.

ஆனால், அந்த உருவம் எந்த பக்கமும் நகராமல் அங்கேயே நின்றுக்கொண்டிருக்க, காரின் லைட்டை அனைத்துவிட்டு அந்த உருவத்தின் மீது ஏற்றிவிட்டுச் செல்லலாம், என்று சூரி கூற, அதன்படி லைட்டை அனைத்து விட்டு காரை ஓட்டுபவர்கள் சிறுது நேரம் கழித்து லைட்டை போட, திடீரென்று இருவரும் அலறியபடி மீண்டும் லைட்டை அனைத்துவிடுகிறார்கள்.

இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ள சூரி, அதை தனது ஃபேஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் உள்ளது நிஜமாகவே பேயா அல்லது வேறு எதையாவது பார்த்து சூரி பேய் என்று நினைத்தாரா, என்பது புரியாத புதிராகவே உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY