Home Tamil Cinema News இசைஞானி இளையராஜா நிகழ்ச்சிக்கு திரையுலகமே எதிர்ப்பு!

இசைஞானி இளையராஜா நிகழ்ச்சிக்கு திரையுலகமே எதிர்ப்பு!

131

ilayaraja

இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்ததை கௌரவிக்கும் பொருட்டு ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நடத்தவுள்ளது. இதற்கு இளையராஜாவும் சம்மதித்து விட்டார்.

இந்நிலையில் அந்த தொலைக்காட்சிக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகின்றது, திரைப்பட உரிமை விற்கும் விஷயத்தில். தற்போது இளையராஜா நிகழ்ச்சியை அந்த தொலைக்காட்சி நடத்தக்கூடாது என திரையுலகத்தினர் கூற, ராஜா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றாராம்.

இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. இருப்பினும் அவர் தன் மனதில் பட்டதை சட்டென்று பேசக்கூடியவர் ஆவார். அன்மையில் வெள்ள பாதிப்பு குறித்து அவர் அளித்த பேட்டியில் சிம்புவின் பீப் பாடல் பற்றி கேள்வியெழுப்பட்ட போது அவர் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.