Home Tamil Cinema News கார் ரேஸ், பைக் ரேஸை பின்னணியாக வைத்து உருவாகும் படம்

கார் ரேஸ், பைக் ரேஸை பின்னணியாக வைத்து உருவாகும் படம்

117

jeyikka-povathu-yaaru

கார் ரேஸ், பைக் ரேஸைப் பின்னணியாக வைத்து ஒரு படம் உருவாகிறது. தலைப்பு ஜெயிக்கப் போவது யாரு. நாயகனாக ஷக்திஸ்காட்டும், நாயகியாக வந்தனாவும் அறிமுகமாகிறார்கள்.

மேலும் சைதன்யா, அத்விக், ஷ்யாம் சுந்தர், சதீஷ்ராமகிருஷ்ணன், கோட்டி, வெங்கட், சோனல் பானர்ஜி, சையத் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கிறார். சீனிவாசன் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங், ஒளிப்பதிவு செய்து இயக்கி இருப்பவர் ஷக்திஸ்காட். ஆண்டன் ஜெப்ரீனுன் இணைந்து இசையும் அமைக்கிறார் ஷக்திஸ்காட்.

இந்தப் படம் குறித்து ஷக்தி ஸ்காட் கூறுகையில், “இன்று அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டாலும் திருட்டுத் தனமாக நடந்து கொண்டிருப்பது கார்ரேஸ், பைக்ரேஸ் இதில் எத்தனையோ பேர் பலியாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் இந்த ஜெயிக்கப் போவது யாரு படத்தில் இந்த ரேஸ் விஷயத்தை முழுக்க முழுக்க காமெடியாகச் சொல்லி இருக்கிறோம்.

ஐந்து குரூப்பை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி இருகிறார்கள். மூன்று கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு ஜீப் இதை வைத்து சீரியஸான விஷயத்தை காமெடியாகச் சொல்லி இருக்கிறோம். பெங்களூர், திண்டிவனம், ஆற்காடு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here