Home Tamil Cinema News ‘சிவாஜியை அவமரியாதை செய்ய வேண்டாம்..’- குஷ்பு

‘சிவாஜியை அவமரியாதை செய்ய வேண்டாம்..’- குஷ்பு

26

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடையாறு பகுதியில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1ஆம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிவாஜி மணிமண்டபம் திறப்பு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகை குஷ்புவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: நடிகர் சிவாஜிகணேசனை தமிழக அரசு அவமானப்படுத்துகிறது. இந்திய திரையுலகம், தமிழகம், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர் சிவாஜி. முதல்வர், துணை முதல்வர், தமிழக அரசுக்கு மேதைகளை மதிக்கத் தெரியவில்லை. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பதால் சிவாஜியை அவமரியாதை செய்ய வேண்டாம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.